Monday, August 22, 2011

யார் இந்த பேரறிவாளன்?


சில அரசியல் கட்சிகள் இப்பொழுது போராட்டத்தில் இறங்கியுள்ளது.. என்னவென்று பார்த்தால், தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டுமென்ற கோரிக்கையை, வைக்கிறார்கள். நல்ல விஷயம் தான் ஏன் எதற்காக, யாருக்காக இந்த கோரிக்கையை வைக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும்.  


முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்தார், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. எனினும் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 


இவைகள் அனைவரும் அறிந்த ஒன்றே, முருகன், சாந்தன், பேரறிவாளன் இவர்களுக்கெல்லாம் இப்பொழுது தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது, இவர்களை எல்லாம் தூக்கில் போட கூடாதென்று , போராட்டங்கள் கிளம்பியுள்ளன ஏன் இவர்களையெல்லாம் தூக்கில் போட கூடாது..?? என்பது என் கேள்வியாகும், ஒரு நாட்டின் முக்கிய மனிதரை, பிரதம மந்திரி வேட்பாளாராக இருக்கும் போது கொலை செய்திருக்கிறார்கள், கொலை செய்ய உதவி செய்து இருக்கிறார்கள், இவர்களுக்கு கருணை காட்டினால் நாளை யார் வேண்டுமானாலும் வந்து நாட்டின் முக்கிய தலைவர்களை கொன்று விட்டு செல்வார்கள் அல்லவா..??  


குறிப்பாக பேரறிவாளனை தூக்கில் இடக் கூடாது என்று போராட்டம்,செய்திருக்கிறார்கள், யார் இந்த பேரறிவாளன்..?? என்ன குற்றம் செய்தார் என்றால்,  பேட்டரி , மோட்டார் சைக்கிள், ஆகியவற்றைக் கொடுத்து படு கொலைக்கு உதவி செய்தது தான், இதெல்லாம் ஒரு குற்றமா என கேட்கலாம் இதுவும் ஒரு குற்றம் தான் அந்த படுகொலைக்கு குண்டு தயாரிக்க எந்த பொருள் வாங்கி கொடுத்தாலும் அவர்களும் அந்த கொலைக்கு உடந்தை தான். 


என் நண்பன் பிரதமரையோ, அல்லது நாட்டின் மிகப்பெரிய தலைவரையோ, கொலை செய்யப் போவது எனக்குத் தெரிகிறது என்றால், அதை நான் தடுக்க வேண்டும், அதை செய்யாமல் நான் மறைத்தால், நானும் அந்த கொலைக்கு உடந்தை தான். இது தான் நடந்து இருக்கிறது இந்த பேரறிவாளன் விஷயத்தில்.  பேரறிவாளனின் தாயாரே சொல்கிறார் நாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் தான் என்று, அப்படி இருக்கும் பொழுது இவர்கள் ஏன் உதவி செய்து இருக்க கூடாது..?? 


விடுதலை புலிகள் செய்த மிகபெரிய தவறே ராஜிவ்காந்தியை கொலை செய்தது தான். இதுவே அவர்களின் தோல்விக்கு காரணம். நம்முடைய தந்தையை ஒருவன் கொலை செய்து விட்டாலே,  நமக்கு கோவம் வந்து அவனை என்ன செய்கிறேன் என்று சபதம் எடுப்போம், ஒரு நாட்டையே ஆளும் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என நினைத்து பார்க்க வேண்டும். 


இப்பொழுது வந்து தூக்கில் போடக் கூடாதென்றால் எப்படி???


ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்படி பதிலாகும் என்னும் வாதங்களும், தூக்கு தண்டனை கொடுத்தால் எப்படி அவர் திருந்த வாய்ப்பு கிடைக்கும் மனிதாபிமானம்வேண்டும் என்பது எல்லாம் சரிதான்....! இதை ஒட்டு மொத்த இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அத்தனை கைதிகளுக்கும் கொண்டு வர நாம் போராடினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.


இந்திய இராணுவம் அங்கே போய் குற்றம் செய்தது, கற்பழித்தது, கொலைசெய்தது என்று வாதிடுபவர்கள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் இப்படி கொலை செய்யாமல், குண்டு வைக்காமல் இருந்ததா என்று யோசித்து விட்டுப் பேசவும். நோக்கம் சரியானது என்றாலும் அவர்கள் சென்ற பாதையும் செய்த கொலைகளும் சரியானதுதான? எத்தனை பேரின் உயிர் போய் இருக்கிறது...? அவை எல்லாம் மனித உயிர்கள் இல்லையா?


இதே ஒரு பாகிஸ்தான்காரன் நம் நாட்டின் மிகப் பெரிய தலைவரையோ அல்லது பிரதமர் வேட்பாளரையோ  கொன்று இருந்தால் நாம் சும்மா இருப்போமா..??? உடனே தூக்கில் போடவேண்டுமென்று போராடி இருப்போம் தமிழர் என்று சொல்லி ஒரு தவறை நியாப்படுத்த முடியுமா..? இப்படி மன்னித்து கொண்டே சென்றால் அடுத்து யார் வேண்டுமென்றாலும் வந்து பிரதமரையே கொலை செய்து விட்டு 20 ஆண்டு சிறையில் இருந்து விட்டு சென்று விடுவான்.. போராட்டம் நடத்துபவர்களே உங்கள் தமிழ் ஆர்வத்தை வேறு வழியில் காட்டுங்கள்...!


தூக்கு தண்டனை வேண்டுமா வேண்டாமா? என்ற விவாதம் வேறு....அதை இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ஆயுதமாக உபயோகம் செய்து ராஜிவ் கொலையினை நியாயப்படுத்த நினைக்கும் அறிவுக்கூர்மைகள் எல்லாம் கண்டிப்பாய் மழுங்கடிக்கப்படவேண்டியவையே. 


இந்த இரண்டினையும் ஒன்றுபடுத்தி போராட்டங்களுக்கு தமிழுணர்வு சாயம் கொடுப்பது இந்தியா என்ற தேசத்தின் ஒற்றுமைக்கு பெரும் குந்தகமாக எதிர்காலத்தில் அமையக்கூடும் என்ற  அச்சத்தையும் இந்தக் கட்டுரை பொதுவில் வைக்கிறது.



தூக்கில் போடுவதும் போடாததும் அரசு எடுக்க வேண்டிய முடிவு....! இங்கே மனிதாபிமானம் பார்க்க வேண்டும் என்பதும் சரி ஆனால் இந்திய அரசால் யார் யாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறதோ அப்போது எல்லாம் இது மாதிரி போராட்டங்கள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தமிழன் என்ற ஒரு உணர்வு இயந்திரத்தை இயக்கி விட்டு அதன் மூலம் தீர்வுகளைச் சொல்வது ஒரு குறுகிய பார்வை என்பதை தண்டனை வேண்டாம் என்று கூறுபவர்கள் அறிவார்களா? என்ற கேள்வியோடு கட்டுரையை நிறைவு செய்கிறோம்



கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



63 comments:

பனங்காட்டு நரி said...

////// சில அரசியல் கட்சிகள் இப்பொழுது போராட்டத்தில் இறங்கியுள்ளது.. என்னவென்று பார்த்தால், தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டுமென்ற கோரிக்கையை, வைக்கிறார்கள். ///////

AN EYE FOR AN EYE WHOLE WORLD BECOMES
BLIND - MOHANDASS KARAMCHAND GANDHI

பனங்காட்டு நரி said...

////// என்ன குற்றம் செய்தார் என்றால், பொம்மை கார்களுக்கு பயன்படுத்தும் பேட்டரி , மோட்டார் சைக்கிள், ஆகியவற்றைக் கொடுத்து படு கொலைக்கு உதவி செய்தது தான், இதெல்லாம் ஒரு குற்றமா என கேட்கலாம் இதுவும் ஒரு குற்றம் தான் அந்த படுகொலைக்கு குண்டு தயாரிக்க எந்த பொருள் வாங்கி கொடுத்தாலும் அவர்களும் அந்த கொலைக்கு உடந்தை தான். /////

உச்ச பட்ச உளறல் ...,

சௌந்தர் said...

பனங்காட்டு நரி சொன்னது…
////// சில அரசியல் கட்சிகள் இப்பொழுது போராட்டத்தில் இறங்கியுள்ளது.. என்னவென்று பார்த்தால், தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டுமென்ற கோரிக்கையை, வைக்கிறார்கள். ///////

AN EYE FOR AN EYE WHOLE WORLD BECOMES
BLIND - MOHANDASS KARAMCHAND GANDHI//


காந்தி இன்னும் பல நல்ல விஷயங்களை கூறி இருக்கிறார் அதையெல்லாம் பின்பற்றி கொண்டு தான் இருக்கிறோமா...???

பனங்காட்டு நரி said...

நீங்க சொன்னதுக்கு தான் அந்த பதில் ...,JUST THINK WHAT YOU WROTE ? AND MY ANSWER

பனங்காட்டு நரி said...

///// ஒரு நாட்டின் முக்கிய மனிதரை, பிரதம மந்திரி வேட்பாளாராக இருக்கும் போது கொலை செய்திருக்கிறார்கள், கொலை செய்ய உதவி செய்து இருக்கிறார்கள், இவர்களுக்கு கருணை காட்டினால் நாளை யார் வேண்டுமானாலும் வந்து நாட்டின் முக்கிய தலைவர்களை கொன்று விட்டு செல்வார்கள் அல்லவா..??
////////

உங்கள் மீது கோபம் என்றால், உங்கள் குடும்பத்தையே எதிர்க்கவேண்டும்.. அல்லது.. உங்கள் இனத்தையே....!!!!
நன்றி : பட்டு

பனங்காட்டு நரி said...

அவன் ஆயிரம் தப்பு இருந்தாலும் அவனை கொல்வதற்கு எந்த மனிதனுக்கும் உரிமையில்லை

Prakash said...

புலி ஆதரவாளர்கள் அறிவு குடும்பம் , எனவே அவர்கள் தவறு செய்திருக்கலாம். தோழா என்னே உனது அறிவு...

பனங்காட்டு நரி said...

சவுந்தர் தான் விசாரணை அதிகாரி தெரியும்ல பிரகாஷ் :))))))

Vaayuputhra said...

"என் நண்பன் பிரதமரையோ, அல்லது நாட்டின் மிகப்பெரிய தலைவரையோ, கொலை செய்யப் போவது எனக்குத் தெரிகிறது என்றால், அதை நான் தடுக்க வேண்டும், அதை செய்யாமல் நான் மறைத்தால், நானும் அந்த கொலைக்கு உடந்தை தான். இது தான் நடந்து இருக்கிறது இந்த பேரறிவாளன் விஷயத்தில்."

அப்போ ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படபோகிறார் என்பது, அப்பாவி பேரறிவாளனுக்கு மட்டும் தன தெரியும் என்கிறீர்களா? என் அப்போது தமிழகத்தை ஆட்சி செய்தவர்களுக்கு தெரியாதா? தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு தெரியாதா? மூப்பனாருக்கு தெரியாதா இல்லை கலைஞருக்கு தான் தெரியாதா? அவர்கள் ஏன் தடுக்கவில்லை...

நீங்கள் சொல்வது சின்னப்புள்ள தனமாக இருக்கிறது... கூட்டு சதி செய்துவிட்டு அப்பாவிகளை மட்டிவிட்டவர்கள் பலர் இருக்கிறார்கள் நண்பரே! புரிந்து கொள்ளுங்கள்...

இதை படியுங்கள் புரியும்
http://tamilpadaipugal.blogspot.com/2011/08/blog-post_3984.html

சைதை அஜீஸ் said...

கழுகு,
நான் பல நாட்களாக உங்கள் பதிவைப் படிக்கிறேன். ஆனால் இதுவரை பின்னூட்டம் இட்டதில்லை. உண்மையில் உங்கள் blok மிகவும் அருமையாக இருக்கும். பல விஷயங்களை நீங்கள் நடுநிலையோடு அலசுவீர்கள். ஆனால் இன்றைய பதிவு,... உண்மையில் நான் மிகவும் வருத்தமடைகிறேன்!!!
இராஜீவ் கொலை வழக்கில் நடந்த விசாரணையே எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் விததில்தான் இருந்தது. இதுவரை குண்டு செய்தவன் யார் என்று துப்பு இல்லை. ஆனால் குண்டு தயாரிக்க பேட்டரியைக் கொடுத்தவன் இவன் தான் என்பதால் இவனுக்கு தூக்கு... நல்ல விசாரணை, நல்ல தீர்ப்பு.
நான் ஜனாதிபதிக்கு கேட்கும் ஒரே ஒரு கேள்வி....
அஃப்சல் குருவின் கோப்பை மேஜையில் அப்படியே வைத்துவிட்டு இந்த கோப்பை அவ்வளவு சீக்கிரம் முடிக்க காரணம்.... அஃப்சல் குருவை தூக்கிலிட்டால் இஸ்லாமிய சமுதாயம் பிரச்சனை பண்ணலாம் அனால் அறிவை தூக்கிலிட்டால் கேட்க நாதி இல்லை என்பதாலா? அல்லது தமிழர்களின் தானைத் தலைவர் உங்கள் சொல்படி கேட்டுக்கொண்டிருப்பதாலா?
இப்படிக்கு
சைதை அஜீஸ்

பனங்காட்டு நரி said...

சைதை அஜீஸ் : இந்த பதிவ போட்டு கிழிக்கலாம்னு தான் நினைச்சேன் ..,வேணா நானே இப்போ இத படிச்சிட்டு வெறி புடிச்சி திரியிரேன் நீங்க வேற விட்ருங்க

( கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத கருத்துரை என்றால் நீக்கி விடலாம் )

suryajeeva said...

தூக்கு தண்டனை விதிப்பது குறித்து நேர்மையான பார்வையை இந்திய அரசாங்கம் இது வரை வெளியிடாததே தவறு எங்கு இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறது... உங்கள் பார்வையை கூர் தீட்ட இந்த இணைப்பிற்கு செல்லவும்..
இல்லை என்றால் wikipedia vil உங்கள் பார்வையை நீங்கள் பதிவு செய்யவும் ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்..

http://en.wikipedia.org/wiki/Capital_punishment_in_India

கழுகு said...

அன்பின் தோழமகைள்...!

கட்டுரையை நெய்யும் போதும் அதை வெளியிட எத்தனிக்கும் போதும் இதற்கு மாற்றுக் கருத்துக்கள் நிறைய வரும் என்ற விடயத்தை கழுகு அறியாமலில்லை....

கட்டுரையில் ஒரு கருத்தினைக் கூறி அதற்கு மறுப்பாக வரும் கருத்துக்களில் இருக்கும் உண்மை நிலைகளையும் வாசகர்களுக்கு எடுத்து இயம்புவதும் எமது பணியாய் இருக்கிறது.

வாசிக்கும் ஒரு வாசகனுக்கு கட்டுரை மட்டுமல்ல அறிவு, அந்த கட்டுரைக்கு வரும் கருத்துரைகளும் சேர்ந்தே ஒரு முழுமையான அறிவினை போதிக்கின்றன.

பேரறிவாளன் ஒரு தமிழ் சகோதரன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் ஒரு தண்டனையை தடுக்க நினைக்கும் பார்வையையும் அதற்கான அரசியல் முன்னெடுப்புக்களையும் நாம் வலுவாக எதிர்க்கும் அதே நேரத்தில்....

ஒரு நிரபராதி அவன் எந்த தேசத்தை சார்ந்தவனாயிருந்தாலும், எந்த சமூகத்தை சார்ந்தவனாயிருந்தாலும் எந்த மதத்தை சார்ந்தவனாயிருந்தாலும் தண்டிக்கப்படக் கூடாது எமது திண்ணமான நிலைப்பாடு.

இந்தக் குற்றம் என்றில்லை எந்த ஒரு குற்றத்திற்குமே அந்த மனிதன் இறக்கும் வரை சிறையில் அடைக்கலாம் என்ற உட்ச பட்ச தண்டனை தாண்டி வேறெதுவும் இருக்கக் கூடாது என்று நாம் கூறும் அதே நேரத்தில்...., அது எந்த ஒரு மனிதனாய் இருந்தாலும் இதே கூற்றினை முன் வைத்துப் போராடும் மனோபாவம் நம் சமூகத்திற்கு வரவேண்டும் என்றும் எண்ணுகிறோம், ஆனால் அப்படி இல்லாமல், தமிழ் தமிழ் என்று தமிழன் என்ற ஒரு உணர்ச்சியின் அடிப்படையில் ஒரே இனத்தவர்கள் செய்யும் குற்றங்களையும், தவறுகளையும் நாம் ஆதரித்துப் போகும் போக்கு இருக்குமாயின் அது ஒரு செம்மையான சமுதாயத்தின், பாரம்பரிய மிக்க ஒரு சமுதாய்த்திற்கு மாபெரும் அவதூறு ஆகும்.

ஈழத்தில் நாடத்தப்பட்ட வன் கொடுமைகள் எவ்வளவு கொடுமையானதோ அவ்வளவு கொடுமையானது பாலஸ்தீனத்தில் நிகழ்த்தப்பட்டது. நாம் ஈழத்தை கண்ணில் வைத்தோம் பாலஸ்தீனத்தை நமது பார்வைக்குள்ளேயே கொண்டு வரவில்லை. அடிப்படையில் கொல்லப்பட்டது மனித உயிர்கள்தான்...!

ராஜபக்ஸே எவ்வளவு கொடியவனோ அவ்வளவு கொடியது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஈராக்கில் அவர்கள் செய்த போர்க்குற்றத்திற்காக ஆயிரம் முறை ஜார்புஷ்னை நாம் உலக பொது நீதிமன்றம் தண்டிக்கலாம்.

இந்திய தேசத்தின் உச்ச நீதிமன்றம் தவறிழைத்துள்ளது எனில் அதே உச்சநீதி மன்றம் கடந்த காலத்தில் தேசத்தின் பல்வேறு மூலைகளில் தூக்கிலிடப்பட்ட பல மனிதர்களுக்கும் இதோ இப்போது தூக்கு கயிற்றின் முன் நிற்கிறாரே அப்சல் குரு அவருக்கும் இன்னும் சொல்லப்போனால் சிறையிலிருக்கிறானே....அஜ்மல் கசாப் அவனுக்கும் இதே மாதிரி அநீதி இழைக்கப் பெறலாம்...என்ற கோணத்திலும் யோசித்துப் பாருங்கள்...

ராஜிவ் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பெற்ற போது வேறு காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணி கட்சி தொண்டர்கலும் சாகவில்லையே ஏன்...? என்று மனித போராட்டங்கள் வெடிக்குமா நமது தேசத்தில்...? ஊழலுக்காக குரல் கொடுக்கிறேன் என்று ஒய்யார அரசியல் நடத்தும் ஒய்யார சமூக நல ஆர்வலர்கள் உயிர் காக்க குரல் கொடுப்பார்களா?

குற்றம் என்று உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இந்திய தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் அதை மதிக்க வேண்டும். அப்படி உச்ச நீதி மன்றமே அநீதி வழங்கியிருக்கிறது என்று நாம் கருதும் பட்சத்தில்.....

காக்கப்படவேண்டியது பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தனின் உயிர் மட்டுமல்ல 125 இந்திய மக்களின் உயிர்கள்...என்ற கோணத்தில் போராட்ட நகர்வுகள் இருக்குமெனில்...அது ஆரோக்கியமான ஒரு நிகழ்வு...!

அப்படி இல்லாமல்...தமிழன் என்ற உணர்ச்சியினை ஏந்தி ஒரு போரட்டம் முன்னெடுக்கப்படுமெனில் ......அது குறுகிய பார்வை மட்டுமல்ல...அது தற்காலிகமாய் ஒரு தவறை நிறுத்தலாம் (தவறாய் இல்லாவிட்டால் சரி..........இருந்திருந்தால்...????) ஆனால் அது நீண்ட நெடிய மனித வாழ்க்கைக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் சரியான ஒரு தீர்வாய் இருக்காது.

இப்போது கூறுங்கள்.. நமது பார்வை எப்படிப்பட்டது...என்று...

தொடர்ந்து வரும் கருத்துரைகளின் ஆழங்கள்...சத்தியத்தை வெளிக்கொணரலாம், உண்மைகளையும் பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதற்கான தெளிவுகளையும் சீறும் கருத்துக்களாக பகிருங்கள்....

சத்தியத்தினை நோக்கி விசால பார்வைகளோடு நடை போடுவோம்...!

சங்கவி said...

//இதே ஒரு பாகிஸ்தான்காரன் நம் நாட்டின் மிகப் பெரிய தலைவரையோ அல்லது பிரதமர் வேட்பாளரையோ கொன்று இருந்தால் நாம் சும்மா இருப்போமா..???//

இதே பாகிஸ்தான்காரன் மும்பையில் குண்டு வைத்ததற்கும், தீவிரவாதிகளாக புகுந்த மும்பையை நாசப்படுத்தினர் அப்போது உயிருடன் ஒருவனை பிடித்தோமே என்ன செய்தது நம் சட்டம் அவனை....

பிரதமரை எந்த அளவிற்கு நேசிக்கிறீர்களோ அந்த அளவிற்கு அப்பாவி பொது மக்களையைம் நேசிக்க வேண்டும்... மும்பையில் இறந்த அப்பாவி பொதுமக்களின் உயிரும் உயிர்தான்...

பேரரவாளன் தூக்கில்ட்டால் அதற்கு மிக முக்கிய காரணமாகம் அவன் தமிழனாக பிறந்ததாக்த்தான் இருக்கும்...

நண்பர் சவுந்தர் தங்களின் இக்கட்டுரை ஒரு பட்சமாக இருக்கிறது....

சங்கவி said...

முதன் முதலாக ஒரு மைனஸ் ஓட்டு போடுகிறேன்....

கழுகு said...

ஒரு பொது வெளியில் அஹோரி என்ற உடனடி பெயரில் வந்து அத்து மீறி மூன்றாம் பட்ச வார்த்தைகளை உபோயோகம் செய்து கருத்து வெளியிட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.

ஒரு கட்டுரையை வாசித்த பின் அதிலிருக்கும் மாற்றுக் கருத்துக்களை நயம்பட வெளிப்படுத்த தெரியாத அநாகரீக மனிதர்கள் வாழும் ஒரு சமுதாயத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறுவதோடு மட்டுமில்லாமல் பொதுவெளியில் பகிரக்கூடாத வார்த்தைகளை பகிர்ந்த அஹோரி அவர்களுக்காக நாங்கள் பிரார்தனைகள் செய்கிறோம்.

நவீன யுகத்தில் ஒரு புது பிளாக்கர் முகவரியை தடம் கண்டுபிடித்து சம்பந்ப்பட்டவரை தடம் புரட்டிக் கூட முடியாது என்று கணக்குப் போட்ட திரு அகோரி அவர்கள்...பரிதாபத்துக்குரியவர்.

http://www.blogger.com/profile/10164148753037340702

மூன்றாம் தர வார்த்தையை பயன்படுத்தியதின் விளைவுகள்....வீரியமானவையாய் இருக்கும் என்பதை உறுதி பட தெரிவிக்கிறோம்.

இரா.ச.இமலாதித்தன் said...

//இதே ஒரு பாகிஸ்தான்காரன் நம் நாட்டின் மிகப் பெரிய தலைவரையோ அல்லது பிரதமர் வேட்பாளரையோ கொன்று இருந்தால் நாம் சும்மா இருப்போமா..??? உடனே தூக்கில் போடவேண்டுமென்று போராடி இருப்போம் தமிழர் என்று சொல்லி ஒரு தவறை நியாப்படுத்த முடியுமா..? இப்படி மன்னித்து கொண்டே சென்றால் அடுத்து யார் வேண்டுமென்றாலும் வந்து பிரதமரையே கொலை செய்து விட்டு 20 ஆண்டு சிறையில் இருந்து விட்டு சென்று விடுவான்.. போராட்டம் நடத்துபவர்களே உங்கள் தமிழ் ஆர்வத்தை வேறு வழியில் காட்டுங்கள்...!//

பிரதமர் உள்ளிட்ட பெரிய தலைவர்கள்(?) கூடும் நாடாளுமன்றதில் கொலைவேரித்தாகுதல் நடத்தியவனுகும், மும்பையில் பல்லாயிர கணக்கான வருங்கால பிரதமர் உள்ளிட்ட பெரிய தலைவர்களாக உருவெடுக்கும் திறமையான பல அப்பாவிகளை கொன்றவனை, பிடித்து தூக்கில் போட்டு விட்டார்களா? அவர்களுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லையென்று சொல்கிறீர்களா? இன்னுமும் கொலையாளியை பல கோடிரூபாய் செலவு செய்து பாதுகாத்து வருகிறார்கள்? இது மட்டும் நியாயமா? அடுத்த நாடான பாகிஸ்தான் காரனுக்கு பலகோடி செலவு செய்வீர்கள்... ஆனால் இந்தியனுக்கு(பேரறிவாளன் இந்தியன் தானே?) மட்டும் ஆதரவு தெரிவிக்க கூடாது.கேட்டால், தமிழ் ஆர்வம்ன்னு சொல்லி திசை திருப்புவீங்க.. சூப்பர்.

திமுக தலைவர் கருணாநிதி கூட மரணத்தண்டனை ஒரு தீர்வல்ல என்பதையே சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

//விடுதலை புலிகள் செய்த மிகபெரிய தவறே ராஜிவ்காந்தியை கொலை செய்தது தான். இதுவே அவர்களின் தோல்விக்கு காரணம். நம்முடைய தந்தையை ஒருவன் கொலை செய்து விட்டாலே, நமக்கு கோவம் வந்து அவனை என்ன செய்கிறேன் என்று சபதம் எடுப்போம், ஒரு நாட்டையே ஆளும் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என நினைத்து பார்க்க வேண்டும். //

சரி, அப்படியென்றால் இந்த பேரறிவாளன் உள்பட தூக்குதண்டனை உறுதிபடுத்த பட்டவர்களின் உறவினர்களுக்கு கோபம் வராதோ? அவர்களும் எதாவது சபதம் எடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

நாட்டை ஆள்கின்றவர்களுக்கு கோபம் முக்கியமில்ல;கோட்பாடுதான் முக்கியம். அந்த கோட்பாடு/கொள்கை எல்லாம் இந்திய குடிமக்களுக்கு பாதிப்பில்லாமல், குடிமக்களின் பாதுகாப்போடு சிறந்த நிர்வாகத்தால் ஆட்சி செய்வது எப்படியென்ற அக்கறை இருப்பதே முக்கியம்.

நாட்டை ஆளும் அவங்களுக்கே எவ்ளோ கோபம் வரும் யென்றால், அந்த ஆளும் தகுதிய கொடுத்த மக்களுக்கு எவ்ளோ கோபம் வரும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவிருக்கு மருமகளான இத்தாலியின் சோனியாவுக்கு, இந்திய பிரதமரை ஆட்டிவைக்கும் தகுதியை, கடந்த நாடாளமன்ற தேர்தலில் கொடுத்ததும் தமிழர்கள்தானே? அப்படிப்பட்ட தமிழனின் ஓட்டு மட்டுமே வேண்டும்; ஆனால்,தமிழன் போராடவே கூடாது; அப்படி அவன் போராடினால், (தமிழ் ஆர்வம் ன்னு நீங்களே சொல்றீங்க...) தமிழ் பிரிவினைவாதிகள், தமிழ் தீவிர வாதிகள் ன்னு புதுசுபுதுசா பட்டம் கொடுப்பாங்க.

இந்த கட்டுரையின் சாரம்சத்தை நான் ஏற்கவில்லை.என்னைபொறுத்த வரையிலும் மரணம் ஒரு முடிவல்ல.இந்த மூவரின் குடும்ப பின்னணில் உள்ளவர்களுக்கும் நீங்க சொன்ன அதே கோபம் வரும் தானே... அப்படி அவர்களும் கோபப்பட்டு, எதாவது செய்தால் எப்படி இருக்கும் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும்.

[ஒருவேளை கோபபட்டால், அவர்களின் அப்போதைய இலக்கு ராகுலாகவோ/சோனியாவாகவோ கூட இருக்கலாம்.(இது ஒரு அனுமானம் தான்!)]

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அன்பு கழுகாருக்கு

சில கேள்விகள் உங்கள் பதிவை படித்த பின் தோன்றியது..

1 . இந்த வழக்கில் இதற்கு முன் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு கிடைத்தது எதனால்?

//இதே ஒரு பாகிஸ்தான்காரன் நம் நாட்டின் மிகப் பெரிய தலைவரையோ அல்லது பிரதமர் வேட்பாளரையோ கொன்று இருந்தால் நாம் சும்மா இருப்போமா..???//


2 . ஒரு பாகிஸ்தான்காரன் இந்திய பாராளுமன்றத்தை தாக்கினான், இன்னும் அவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொடுத்து சந்தோசமா வச்சு இருக்கே எதனாலே? (அவரு புத்தகம் கூட எழுதி வெளியிடப்போறார்ன்னு செய்தி)

3 இன்னோர் பாகிஸ்தான்காரன் மும்பை ரயில்வே ஸ்டேஷன்-ல புகுந்து எத்தனை பேரை சுட்டான் இன்னும் அவனை என்ன செய்தீர்கள்?...

இன்னொரு சந்தேகம் நீங்க பிரதமரை / பிரதமர் வேட்ப்பாளரை கொன்னவங்களை மட்டும் தான் தூக்குல போடுவீங்களா !!??.

தமிழன் said...

கழுகார் அவர்களே நீங்கள் உங்கள் பிரதமருக்காக வாதாடுகிறீர்கள்.பிரதமர் இரத்த உறவல்ல உங்களுக்கு அப்படியிருக்கும் போது ஈழத்தில் தங்கள் இரத்த உறவுகள் எந்த வித கேள்வியின்றி உங்கள் ராணுவத்தால் ஈவிரக்கம் இல்லாமல் கொன்றழிக்கப்பட்டனர். அவர்களது சகோதரர்கள் ஒவ்வொருவரும் இப்படி இந்திய ராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக புறப்பட்டால் என்ன ஆகும் ஒரு கணம் சிந்தித்தீர்களா .உங்கள் அரசியல் வாதிகள் செய்யும் அரசியல் கொலைகளுக்கு மாலை போட்டு வாழ்த்துங்கள் .பேரறிவாளனுக்கு மட்டுமல்ல தமிழன் எவனுக்கும் அநீதி நடை பெறக்கூடாது

வாழ்க இந்திய ஜனநாஜகம் வாழ்க

ஆனந்தி.. said...

//யார் இந்த பேரறிவாளன்?//
ஒரு 19 வயசு பையனா இருந்த போது....அரசியல் சதி மற்றும் தீவிர வாத செயல் வீரர்களால் மாட்டி விட பட்ட சிறுவன்...(நான் சொன்னது 25 வருஷம் முன்னாடி) அப்போ சிறுவன் செஞ்சது தப்பு இல்லையானு கேட்டால்..தப்பு தான்...ஆனால் வழக்கி குற்றம் சாட்டப்பட்ட மெயின் குற்றவாளிகள் எல்லாம் கொல்லப்பட்டு....கொலை செய்யபட்டு..:-) ..தற்கொலை செய்யப்பட்டு இறந்தபிறகு...சிலர் விடுவிக்கவும் பட்டு விட்டபிறகு...மீதி இருப்பவங்களுக்கு ஆயுள் தண்டனையில் அனுபவித்தது போதாதா சௌ?

ஆனந்தி.. said...

பேரறிவாளன் மடலில்...

//19 வயதில் அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட
நிலையில், கடந்த 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப்
பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்க்காப்புப் போரின்
அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே
புதல்வன் நான். துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
தங்களைப் போன்ற மனித நேய உள்ளங்களின் துணையிருப்பதால், மரணத்தை வெல்வேன் என்ற
நம்பிக்கை உண்டு. //

கொலை சதி நடக்கிறது தெரியாமலே மாட்டிகொண்ட நபருக்கு எந்த தமிழனும் சப்போர்ட் பண்ணவே இல்லை...தப்பு எதுவுமே பண்ணலைன்னு கூட யாரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வரலை...ஆனால்...கொடுத்த தண்டனை போதும்..தூக்கு வேணாம் என்பதே கோரிக்கை...அதுவும் ஒரு தமிழனாய் ,வேண்டுதலும் கூட...

ஆனந்தி.. said...

சரி...கசாப் விஷயத்தில் தூக்கு கொடுக்க ஒத்துப்பீங்க தானே கேட்டால்...ம்ம்...ஒரு இந்தியனாய் வெறுப்பின் உச்சகட்டத்தில் நானும் கூட போஸ்ட் போட்டு இருக்கிறேன்...ஆனால்...ஒன்னு நல்லா கவனிக்கணும்...கசாப் வெகு நேரடியாய் கொலையில் சம்பந்தப்பட்ட ஒருவன்...தொலைகாட்சியில் வெகு அப்பட்டமாய் கொலை செய்ததை பக்காவாய் பார்த்து கொதிப்படஞ்சவங்க நாம்...அவன் நேரிடை குற்றவாளி...அவனுக்கு தூக்கு னு கொடி பிடிப்பதில் இருக்கும் மன உணர்வுக்கும்...பேரறிவாளைனின் தவறுக்கும் இருக்கும் ஒற்றுமையான தூக்கு தண்டனையை ஒரே தராசில் வைத்து நிறுத்து பார்க்க மனம் விரும்ப வில்லை...(ஆனால் இதே நேரத்தில் கசாப் க்கு ஆதரவாய் பாகிஸ்தான் பிளாக்கர் ஒருவரும் ஜஸ்டிபை பண்ணலாம்...:-) அவர் நாட்டு சார்பாய் ஏதோ ஒரு நெட் வொர்க் கில்..:-) )

ஆனந்தி.. said...

ஆயுள் தண்டனை முடிஞ்சபிறகும் கூட அரசு விடுதலை செய்யாமல் இழுத்தடிக்கும் சட்டங்கள் போடுறதுக்கு...பேசாமல் போடாமலே இருக்கலாம்....காந்தி சொன்னது மாதிரி சிறைச்சாலை அப்டிங்கிறது ஒருவன் செய்த தண்டனையை உணர அவனுக்கு கிடைச்ச மருத்துவமனை மாதிரி உபயோகமா இருக்கணுமே ஒழிய...அதுவே அவன் உயிரை சாவடிக்க கூடாது...

பேரறிவாளன் மேலே சிறைத்துறை அதிகாரிகள் எல்லாருக்கும் நல்ல அபிப்ராயம் இருக்கு...ஏன் குடும்ப தகராறில் கொலை செஞ்சு ஆயுள்தண்டனை அனுபவகிரவனுக்கு நற்சான்றிதழ் கொடுத்து தண்டனை காலம் குறைக்கிறது மட்டும் தான் நல்ல சட்டமா...??

ஆனந்தி.. said...

ராஜீவ் காந்தி கொலை கேஸ் ஐ டீல் பண்ண சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ் பேட்டியில் குறிப்பிட்ட சில வரிகள் எல்லாம்...அப்பாவி மனிதர்கள் எப்படி அரசியல் வியாதிகளால் நாசமாக்க படுராங்கனு புரிஞ்சது...

http://www.youtube.com/watch?v=7YYfXWxe_1A&feature=player_embedded#!

அவர் சொன்ன சாராம்சங்களில் சில..
**ராஜீவ் கொலை நடந்த அன்று லலித் சந்திர சேகர் ஏன் மரகதம் சந்திரசேகரை தான் அட்மிட் பண்ணியதா முன்னுக்கு பின் முரனா சொள்ளலனும்?

**சம்பவம் நடந்த அன்று தமிழக இப்போதைய (சோனியா )காங்கிரஸ் பார்ட்டி ஆளுங்க ஏன் ஒருத்தன் கூட சாவ்ல? :-)))

** அவரின் யூ பி எஸ் சி நேர்காணலில் ராஜிவின் தடா சட்டம் பற்றி குறை சொன்னதுக்கு promotion தடுக்க பட்டது ஏன்?

ஆனந்தி.. said...

சௌ...ஒரே விஷயம்....எந்த ஒரு குற்றத்துக்கும் தண்டனை மரணம் தான் என்பது தீர்வு இல்லவே இல்லை...அப்படி சட்டத்தின் படி தூக்கு தண்டனை கொடுக்க பட்டாலும்...மர்மமான தகவல்களை வெளிப்படையாய் அறிவிச்சுட்டு செயல்படுத்தட்டும்....தமிழன் தமிழனை சப்போர்ட் பண்றான் அப்டிங்கிரத்தை விட...திருந்திய மனிதர்களுக்காய் சில தீர்ப்புகள் திருத்தபடுவதில் எந்த தப்பும் இல்லை..:-)))

கழுகு said...

இது வரை வந்திருக்கும் அத்தனை கருத்துரைகளும் கட்டுரையினையும், கட்டுரைக்கு விளக்கமாய் வந்த கருத்துரைகளையும் மேலோட்டமாக விளங்கிக் கொண்டு பதிலளித்திருப்பதற்கு பின்னால் இருக்கும் ஒரு உணர்வினைத்தான் நாங்கள் உணர்ச்சியின் பேரில் பார்க்கும் பார்வையாக கொள்கிறோம்.

பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும் என்ற நோக்கில் கட்டுரை செய்யப்படவுமில்லை. தூக்கில்தான் போட வேண்டும் என்று வலியுறுத்தவும் இல்லை.

குற்றமிருப்பின் அதிகபட்ச தண்டனையாக மரணிக்கும் வரையில் சிறையிலடைக்கலாம் என்றும் மரண தண்டனை என்பது மொத்தமாகவே இந்தியா முழுவதும் நீக்கப்பட வேண்டும் என்பதும் எமது பார்வையாக இருக்கிறது.

தவறான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்குமெனில் அது தவறு என்பது நிரூபணம் செய்யவும் அதை எதிர்த்து கேள்வி கேட்கவும் என்ன வழிமுறைகள் இருக்க முடியும் என்ற கேள்வியையும் சாமானிய மக்களின் கேள்வியாக இங்கே முன் வைக்கிறோம்...?

இன்று மரண தண்டனையை எதிர்த்து போராடும் இந்த நிலைமை இன்னும் வலுவாக பெரும் புயலாக மையம் கொண்டு இந்தியா முழுவதிலுமே மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும்.

திரு மோகன்ராஜ் போன்ற சிபிஐ முன்னாள் ஆபிசர்கள் தங்களின் கருத்துக்களை நீதிமன்றத்தில் இதுவரையில் எடுத்து வைத்துள்ளனரா? எதிர் வழக்கு தொடர்ந்துள்ளனரா? அப்படி செய்ய முடியாத அளவிற்கு தேசம் இருக்கிறது எனில் ....ஒது ஒட்டு மொத்த இந்தியர்களின் கழுத்திற்கு முன்னாலும் தொங்கும் தூக்கிற்கு சமம்....!

ஒரு உயிர்க்கு இன்னொரு உயிர் எடுப்பது சரியான தீர்வு இல்லை என்று நாம் அறிந்திருக்கிறோம்.


பேரறிவாளன் சாந்தன், முருகனின் தூக்கு தண்டனைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை நிலைகள் எதிர்த்து செய்யும் போராட்டம்.....ஒட்டு மொத்த தேசத்திலும் நடக்கும் அநீதிக்கான தீர்வாய் இருக்க வேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம்...!

ஆனால்...அதற்கு மாறாக.. .இது ஒரு உணர்ச்சி சார்ந்த விடயமாக அரசியல் நகர்வாக இருப்பதை வலுவாக கண்டிக்கிறோஒம்.

கழுகு said...

அஜ்மல் கசாப்பை ஒரு உதாரணத்திற்குதான் நாம் சொன்னோம்....!

இதே இடத்தில் ஒரு பாகிஸ்தானிய நாட்டுக்காரரோ...ஏன்.... இன்னும் சொல்லப்போனால் வடநாட்டவர் யாரேனும் இருந்தால்....

இன்று சீறிப்பாயும் சீமான்கள் சீறீப்பாய்வார்களா? கண்டிப்பாய் மாட்டார்கள்....!

தமிழன் என்றால் எந்த உணர்வு வருகிறதோ அதே உணர்வு எல்லா மனிதர்களிடத்திலும் வரவேண்டும்....! இந்த அரசியல்வாதிகள் உண்மைகளை எடுத்தியம்புவதை விட தங்களை முன்னெடுக்கும் ஒரு களமாக இதை உருவாக்கிக் கொள்கிறார்கள்...

அப்பாவிகள் யாராய் இருந்தாலும் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்களே....! அடிப்படையில் உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே....?

இதே அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டம் இந்திய தேசத்தை உலுக்குப் போடட்டும். பேரறிவாளன்கள் விடுவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் தூக்கு தண்டனை என்ற ஒன்றே இல்லாத நிலை வரட்டும்.....

இதை செய்வார்களா? சீறும் சீமான்கள்.....?

கழுகு said...

ராஜிவ் கோல்லப்பட்டதை நியாயப்படுத்துபர்களுக்கு ஒரு கேள்வி....

1) ராஜிவ் என்பர் ஒரு தேசத்தின் இளம் தலைவர் இல்லையா?

2) இந்தி இராணுவம் நடாத்திய கொடுமைகளுக்கு பலிக்கு பலியாக் ராஜிவை கொன்றது சரியென்றூ சொல்லும் போது இங்கேயும் ஒரு உயிர் பலி ஆனதை ஏன் நாம் உணர மறுக்கிறோம்...? ராஜிவ் காந்தி வட நாட்டவர் என்பதாலா?

3) விடுதலைப்புலிகளின் கைகள் இந்திய தேசத்தில் ஊடுருவி பல காங்கிரஸ் உள்பட பல அரசியல்வாதிகளின் கைகளை கட்டிப் போட்டு வேடிக்கை பார்க்கச் செய்து தமிழ் மண்ணில் நிகழ்த்திய கர்ண கொடூர படுகொலையை எந்த மனசாட்சியோடு நியாயப்படுத்தப் போகிறீர்கள்...?

4) ராஜிவ் காந்தி என்ற தலைவரின் மறைவுக்குப் பின்னால் 1991ல் இருந்து இந்திய தேசம் முன்னேற்றப்பாதையை விட்டு எவ்வளவு தூரம் பின்னோக்கிப் போய் இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?


5) இதே ராஜிவின் கொலைதான் ஒரு போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரவும்... அப்பாவி மக்களை கொன்றழிக்கவும் காரணமாயிருந்தது என்பதையும் ஒத்துக் கொள்வீர்கள்தானே....?

பேரறிவாளன் மட்டுமல்ல... இன்னும் தேசத்திலிருக்கும் தூக்கு தண்டனை கைதிகள் எல்லோருமே மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வேறு உச்ச பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கினை சரியான பாதையில் செலுத்தி கபட நரிகளை பிடித்து இழுத்து வந்து மக்கள் முன் போட வேண்டும்...?

இதுவே கழுகின் நிலைப்பாடு...? என் தேசம் இதை செய்யுமா? என் மக்கள் சரியான பாதையில் பயணிப்பார்களா....?

கழுகு said...

இந்திய தேசத்தின் மக்களை முட்டாள்களாக்கி வைத்திருக்கும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கெட்டொழிவார்களாக...

உணர்ச்சின் அடிப்படையில் எம்மக்களை ஒன்று சேர்க்கும் சுயநல அரசியல்வாதிகள் ஒழிந்தே போகட்டும். பேரறிவாளனை காக்க வேண்டும் என்று யோசிக்கும் என் சக தமிழன்... அறிவைக் கொண்டு போராட்டத்தையும் எதிர்ப்பையும் முன்னெடுக்கட்டும்...!

காஷ்மீரில் கொல்லப்பட்டால் அது உயிர், இராமேஸ்வரத்தில் கொல்லப்பட்டால் அது வெறும் செய்தி என்ற நிலை தாண்டி ஒட்டு மொத்த சமூகமும் உயிரின் உன்னதம் உணரட்டும்...

இன்றைக்கு காங்கிரஸ்காரர்களும் இந்த கொலைக்கு பின்ணனி என்று கூறும் என் சக தமிழன் கடந்த இருபது ஆண்டுகளாக இதே காங்கிரசுக்கும் அதோடு கூட்டணி வைத்திருந்த திராவிட கட்சிகளுக்கும் தொடர்ந்து வாக்களித்து வந்ததை மறக்க வேண்டாம்....!

தூக்கு கயிற்றின் முன் ஒரு மனிதன் வந்தவுடன் தான் நமக்கெல்லாம் உணர்ச்சிகள் வருமெனில் இவ்வளவு நாளாக மழுங்கிப் போனா பார்வைகள் கொண்டிருந்தோம் என்று பகிங்கரமாய் நாமே அறிவிக்கிறோம்.

யார் இந்த மோகன்ரஜ்...? இவரின் கருத்துக்கள் மீடியாக்களில் வருகிறதே...? ஆளும் அரசுகள் இப்போதாவது செவி மடுக்குமா...? இந்த முன்னாள் சிபிஐயின் வாதங்களுக்கு...?

கழுகு said...

பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் அவர் குற்றமற்றவர் என்று வாதத்தை முன்னெடுத்து கொண்டு செல்பவர்கள் உண்மையான ஒரு உயிர் பலிக்கு எதிராய் இருப்பதை உணர முடிகிறது...

ஆனால் ராஜிவ் கொலையினை சிலர் நியாயப்படுத்தும் வாதத்திற்கு பின்னால் இருக்கும் வக்கிரம் என்னவென்றும் நாம் உணரவேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ன? இந்திய இராணுவம் ஏன் இலங்கை சென்றது? அங்கே இந்திய இராணுவம் என்ன செய்தது? விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்தை என்ன செய்தனர்? ஏன் இந்திய இராணுவம் திரும்பி வந்தது...? விடுதலைப்புலிகள் ஏன் மற்ற போராளி இயக்கங்களை அழித்தனர்? மாத்தையாவை கொல்ல அவர்களிடம் என்ன விதமான ஆதரங்கள் இருந்தன...?

இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு ராஜிவை கொன்றது சரியா தவறா என்று அவர்கள் வாதிட்டட்டும்....!

பேரறிவாளனை விடுவிக்க போராடுவது வேறு ...அதற்காக ராஜிவ் கொலையை ஆதரிப்பது வேறு.... என்பதனை தமிழ்சமுதாயம் உணரவேண்டும்.

Priya said...

பதிவுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

பனங்காட்டு நரி said...

ஆனந்தி : மிக சரியான பார்வை ..,நீங்கள் சொன்னது ..,
AN EYE FOR AN EYE WHOLE WORLD BECOMES
BLIND ..., this is not for only tamilians ..,all of bolivia ,chezh,palestianians ,all over the world ..,

பனங்காட்டு நரி said...

ஒரு உயிரை எடுப்பதற்கு ஆதரவாக கழுகில் ஒரு பதிவு .,Hats off கழுகு ..,pls publish this comment

பனங்காட்டு நரி said...

இப்போதைக்கி என்னக்கு தெரிஞ்சி ..,கழுகு ..,ஹிட்ச்க்கு தான் எழுதறதா தெரியுது ...,கழுகு

ரா. ராஜ்குமார் said...

இதை படிக்கவேண்டும்

http://www.perarivalan.blogspot.com/

R.Elan. said...

இங்கு ஒரு பின்னூட்டதின் மூலம் மட்டும் உங்கள் பதிவு தவறானது என கூற முடியாது,இது பல்வேறு தளங்களுக்கு இட்டு சென்று விக்கிபீடியா அளவிற்கு போய்விடக்கூடிய வரலாற்று விடயம்.நண்பர்கள் பேரரறிவாளனின் தூக்கு தண்டனையை எதிர்த்து பின்னூட்டத்தில் வைத்த வாதங்கள் குறைவே. முதன் முதலாக மைனஸ் ஒட்டு.

Yowan said...

நியாயமான முறையில் விசாரணை நடத்தாமல் முதல் நிலை குற்றவாளிகளை விட்டுவிட்டு உதவியவர்கள் என்பதற்காக தூக்குதண்டனை என்பது அதிகம்....
மேலும் விவரத்திற்கு http://www.tamilthai.com/?p=24588#.Tk_heLlZzTw.blogger

alavoudine said...

புலிகள் அழிவுக்கு காரணம் புலிகள்தான் தம்மை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா?, 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணதில் தான் உண்டு தன் வியாபாரம் உண்டு என்று இருந்த அப்பாவி முஸ்லிம் தமிழர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் பல பல நுற்றாண்டு காலமாய் வாழ்ந்த வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றயும் போட்டுவிட்டு உடுத்திய துணி 500 ருபாய் பணம் மட்டுமே அனுமதி என்று நான்கு மணி நேரத்தில் லாரிகளில் வைத்து விரட்டியது யார்? இரக்கமே இல்லாமல் குழ்ந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் என்று பார்க்காமல் விரட்டியது யார்? குழ்ந்தைகள் கழுத்தில் கிடந்த சங்கிலி, வளையல் நகைகளை கொரடை கொண்டு வெட்டி எடுத்தவர்கள் யார்? கொள்ளை அடித்த பொருள்களை புத்த கோவிலில் வைத்து விற்றவர்கள் யார்? சிங்களவனா? இல்லையே புலிகளைதானே அது மட்டுமா கிழக்கு மாகாணத்தில் வாசித்த லட்சகணக்கான முஸ்லிம் தமிழர்களை விரட்டி அவர்களை அகதியாய் ஆக்கியது, காலையில் பள்ளிவாசலில் தொழுது விட்டு வந்த அப்பாவி முஸ்லிம்களை குருவி சுடுவது போல் சுட்டு கொன்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம், நரேந்திர மோடியை விட ஒருபடி மேலே போய் முஸ்லிம்களுக்கு அநீதி இளைத்தது புலிகள்தானே இந்த விசயத்தில் பிரபாகரன் ஓர் இந்துமதவெறியர் போல் நடந்த இருக்கின்றார் ஆனால் அவரை ஆதரிப்பது எல்லோரும் இந்து மத எதிர்பாளர்கள் இதுதான் வேடிக்கை,
அப்பாவிகளை கொலை செய்வதில் ராஜபக்சேவுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை பிரபாகரன், எத்தனை தமிழர்கள், மாற்று கருத்து உள்ள அரசியல் தலைவர்கள், சகோதர இயக்க தலைவர்கள், சொந்த இயக்கத்தை சேர்த்தவர்கள் முஸ்லிம்கள், அப்பாவி சிங்களவர்கள் சொல்லிக்கொண்டே போகலாம், 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பொழுது 40 கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களும் போலீஸ் இறந்தர்களே அவர்கள் தமிழர்கள் இல்லையா? இவர்கள் எல்லோரும் இந்திய அமைதி படையுடன் சேர்ந்து போய் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடி விட்டு வந்தவர்களா? புலிகளுக்கு உதவ போய் அவருக்கே தெரியாமல் மிகபெரிய சதியில் நளினி என்ற அப்பாவி 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவதற்கு காரணம் புலிகள்தானே,
புலிகளுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லுகின்றர்களே புலிகள் மட்டும் கலைஞர்க்கு துரோகம் செய்யவில்லயா? 1989 இல் புலிகளுக்கு உதவ போய் ஆட்சியை இழந்தார், புலிகளை ஆதரித்த ஒரே காரணத்துக்காக ராஜிவ் கொலை பழியை சுமந்தார், அதனால் தானே 1991ஆம் ஆண்டு தி,மு, க படுதோல்வியை சந்தித்தது, ராஜுவை கொலை செய்தால் அந்த பழி நம்மை ஆதரிக்கும் தி மு கதிற்கு போய் விழும் என்று ஏன் பிரபாகரன் சிந்திக்கவில்லை?, எல்லோரும் தமிழர்கள் என்கின்றர்களே இலங்கைஇல் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு பிரச்சினை வந்த பொழுது புலிகள் என்ன உதவி செய்தார்கள்? தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும் ஆனால் மற்றவர்களுடை பிரச்னை அவரவர்களுக்கு, 1985 களில் எல்லோரையும் போல் புலிகளை ஆதரித்தவன்தான் நான், இப்போது என்னை இப்படி எழுதுவதற்கும் காரணம்மும பிரபாகரன்தான், அப்பாவி இலங்கை தமிழர்கள்தான் பாவம் ஒருபக்கம் புலிகளும் மறுபக்கம் இலங்கை ராணுவத்தாலும் வாழ்விழந்து நிற்கின்ற்கள்,

alavoudine said...

புலிகள் அழிவுக்கு காரணம் புலிகள்தான் தம்மை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா?, 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணதில் தான் உண்டு தன் வியாபாரம் உண்டு என்று இருந்த அப்பாவி முஸ்லிம் தமிழர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் பல பல நுற்றாண்டு காலமாய் வாழ்ந்த வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றயும் போட்டுவிட்டு உடுத்திய துணி 500 ருபாய் பணம் மட்டுமே அனுமதி என்று நான்கு மணி நேரத்தில் லாரிகளில் வைத்து விரட்டியது யார்? இரக்கமே இல்லாமல் குழ்ந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் என்று பார்க்காமல் விரட்டியது யார்? குழ்ந்தைகள் கழுத்தில் கிடந்த சங்கிலி, வளையல் நகைகளை கொரடை கொண்டு வெட்டி எடுத்தவர்கள் யார்? கொள்ளை அடித்த பொருள்களை புத்த கோவிலில் வைத்து விற்றவர்கள் யார்? சிங்களவனா? இல்லையே புலிகளைதானே அது மட்டுமா கிழக்கு மாகாணத்தில் வாசித்த லட்சகணக்கான முஸ்லிம் தமிழர்களை விரட்டி அவர்களை அகதியாய் ஆக்கியது, காலையில் பள்ளிவாசலில் தொழுது விட்டு வந்த அப்பாவி முஸ்லிம்களை குருவி சுடுவது போல் சுட்டு கொன்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம், நரேந்திர மோடியை விட ஒருபடி மேலே போய் முஸ்லிம்களுக்கு அநீதி இளைத்தது புலிகள்தானே இந்த விசயத்தில் பிரபாகரன் ஓர் இந்துமதவெறியர் போல் நடந்த இருக்கின்றார் ஆனால் அவரை ஆதரிப்பது எல்லோரும் இந்து மத எதிர்பாளர்கள் இதுதான் வேடிக்கை,
அப்பாவிகளை கொலை செய்வதில் ராஜபக்சேவுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை பிரபாகரன், எத்தனை தமிழர்கள், மாற்று கருத்து உள்ள அரசியல் தலைவர்கள், சகோதர இயக்க தலைவர்கள், சொந்த இயக்கத்தை சேர்த்தவர்கள் முஸ்லிம்கள், அப்பாவி சிங்களவர்கள் சொல்லிக்கொண்டே போகலாம், 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பொழுது 40 கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களும் போலீஸ் இறந்தர்களே அவர்கள் தமிழர்கள் இல்லையா? இவர்கள் எல்லோரும் இந்திய அமைதி படையுடன் சேர்ந்து போய் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடி விட்டு வந்தவர்களா? புலிகளுக்கு உதவ போய் அவருக்கே தெரியாமல் மிகபெரிய சதியில் நளினி என்ற அப்பாவி 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவதற்கு காரணம் புலிகள்தானே,
புலிகளுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லுகின்றர்களே புலிகள் மட்டும் கலைஞர்க்கு துரோகம் செய்யவில்லயா? 1989 இல் புலிகளுக்கு உதவ போய் ஆட்சியை இழந்தார், புலிகளை ஆதரித்த ஒரே காரணத்துக்காக ராஜிவ் கொலை பழியை சுமந்தார், அதனால் தானே 1991ஆம் ஆண்டு தி,மு, க படுதோல்வியை சந்தித்தது, ராஜுவை கொலை செய்தால் அந்த பழி நம்மை ஆதரிக்கும் தி மு கதிற்கு போய் விழும் என்று ஏன் பிரபாகரன் சிந்திக்கவில்லை?, எல்லோரும் தமிழர்கள் என்கின்றர்களே இலங்கைஇல் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு பிரச்சினை வந்த பொழுது புலிகள் என்ன உதவி செய்தார்கள்? தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும் ஆனால் மற்றவர்களுடை பிரச்னை அவரவர்களுக்கு, 1985 களில் எல்லோரையும் போல் புலிகளை ஆதரித்தவன்தான் நான், இப்போது என்னை இப்படி எழுதுவதற்கும் காரணம்மும பிரபாகரன்தான், அப்பாவி இலங்கை தமிழர்கள்தான் பாவம் ஒருபக்கம் புலிகளும் மறுபக்கம் இலங்கை ராணுவத்தாலும் வாழ்விழந்து நிற்கின்ற்கள்,

உமர் | Umar said...

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை அதிகாரி ரகோத்தமன், தான் எழுதியுள்ள புத்தகம் உள்ளிட்ட பல பத்திரிகைகளின் பேட்டிகளிலும் கூறியிருக்கும் ஒரு விஷயம், ராஜீவைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட 'பெல்ட் பாம்' யாரால் எப்படி தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்பதாகும். ஆனால், பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு அவர்தான் பெல்ட் பாம் தயாரித்தார் என்பதாகும். இந்த முரணுக்கு கட்டுரை ஆசிரியர் கூறும் பதில் என்னவோ?

ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் தடா வழக்கின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டது.(ஒப்புதல் வாக்குமூலம் எப்படி பெறப்பட்டது என்பது இன்னும் கொடுமையான விஷயம்.) இந்த முரணுக்கும் கட்டுரை ஆசிரியர் பதிலளிக்கட்டும்.

கொலைத் திட்டம் மூவரைத் தவிர யாருக்கும் தெரியாது என்பதை ஒப்புக்கொண்ட நீதிமன்றம், கொலைத் திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை என்று 19 பேருக்கான தூக்குத்தண்டனையை ரத்து செய்தது. ஆனால், கொலைத்திட்டத்தைப் பற்றி அறிந்திராத பேரறிவாளனுக்கு தூக்கு விதித்தது. இந்த முரணுக்கும் கட்டுரை ஆசிரியர் பதிலளிக்கட்டும்.

தற்பொழுது படித்தது போல் அரைகுறையாக படிக்காமல் முழுமையாக படித்துவிட்டு பதில் கூறுங்கள். கட்டுரை எழுதிய சௌந்தர் மற்ற பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காமல் ஒதுங்கியதைப் போலல்லாமல், எனது கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்று எண்ணுகின்றேன்.

அனாமிகா துவாரகன் said...

//நம்முடைய தந்தையை ஒருவன் கொலை செய்து விட்டாலே, நமக்கு கோவம் வந்து அவனை என்ன செய்கிறேன் என்று சபதம் எடுப்போம், ஒரு நாட்டையே ஆளும் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என நினைத்து பார்க்க வேண்டும்//

ஹா ஹா ஹா. பெரிய காமடி இது தான். கழுகில் நல்ல விசயங்கள் வரும் என்று எதிர் பார்த்தால் ஏன் இப்படி முட்டாள் தனமான வாதங்களை தாங்கி வருகிறது?

உங்கள் தந்தை என்பதால் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கற்பழித்தாலும் பக்கத்து வீட்டுக்காரன் அடிக்க வரக்கூடாது. வந்தால் உங்கள் தந்தை செய்த ரேப்பையும் மறந்து அப்பா என்ற பாசம் பொங்கி அடிக்க வரும் பக்கத்து வீட்டுக்காரனை தப்பு என்று கூறுவீர்கள். அப்படித்தானே. சபாஷ்.

///என் நண்பன் பிரதமரையோ, அல்லது நாட்டின் மிகப்பெரிய தலைவரையோ, கொலை செய்யப் போவது எனக்குத் தெரிகிறது என்றால், அதை நான் தடுக்க வேண்டும், அதை செய்யாமல் நான் மறைத்தால், நானும் அந்த கொலைக்கு உடந்தை தான். //
அடங்கொய்யாலே. நண்பன் என்றால் தடுக்க வேணும். அதுவே தந்தையாகவோ தாயாகவோ இருந்தால் தடுக்கலாமா முடியாதா? டவுட் நம்பர் 2.

அனாமிகா துவாரகன் said...

டவுட்டு நம்பர் மூன்று: நாட்டு தலைவர் (பெரிய தலைவருக்கு டெபினிஷன் என்ன பை த வே?) என்பதனால் அவர் எப்படிப் பட்ட அயோக்கியன் என்றாலும், முட்டாள்தனமான தேச பக்தியோட அவரை காக்கறதுக்கு அர்ஜூன் மாதிரி நரம்பு புடைக்க போராடணும். இந்தியா உருப்பட்ட மாதிரித் தான். இந்த ஜென்மத்தில நடக்காது.

//இந்த இரண்டினையும் ஒன்றுபடுத்தி போராட்டங்களுக்கு தமிழுணர்வு சாயம் கொடுப்பது இந்தியா என்ற தேசத்தின் ஒற்றுமைக்கு பெரும் குந்தகமாக எதிர்காலத்தில் அமையக்கூடும் என்ற அச்சத்தையும் இந்தக் கட்டுரை பொதுவில் வைக்கிறது.//
இந்தியா என்ற தேசத்தின் ஒற்றுமைக்கு பெரும் குந்தகமாக அமையும். வெக்காமாய் இல்லை இப்படி சொல்லுவதற்கு. தமிழன் என்றால் காலில் கிடந்து கேவலப்பட வேண்டும் என்று சொல்கிறீர்கள். எகிப்தில இருந்து வந்த ஆரியரை ஆள விட்டுவிட்டு சுரணை இல்லாமல் மூத்த குடிகளான திராவிடர் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆஹா என்ன பெருந்தன்மை.

//இந்திய இராணுவம் அங்கே போய் குற்றம் செய்தது, கற்பழித்தது, கொலைசெய்தது என்று வாதிடுபவர்கள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் இப்படி கொலை செய்யாமல், குண்டு வைக்காமல் இருந்ததா என்று யோசித்து விட்டுப் பேசவும். //
அடுத்த உளறல். அவங்க சாணிய மிதிச்சா நானும் மிதிப்பேன்னு சொல்றீங்க.

அனாமிகா துவாரகன் said...

//இவர்களுக்கு கருணை காட்டினால் நாளை யார் வேண்டுமானாலும் வந்து நாட்டின் முக்கிய தலைவர்களை கொன்று விட்டு செல்வார்கள் அல்லவா..?? //

இதுங்கள போடுத்தள்ளினால் தான் இந்தியா உருப்படும் என்றாலும் போட்டுத்தள்ள விட மாடாராம் இவரு. இந்தியாவோட முன்னேற்றத்திற்கு முதல் எதிரி அரசியவாதிங்க இல்லை. இவ‌ங்களை மாதிரியானதுங்க தான் முதல் எதிரி.

அப்புறம் காசால , ஈராக்ல நடக்கும் போது குரல் கொடுக்கலன்னு இந்த புத்திசாலிங்க அறிக்கை விடுவாங்க. உங்க வீட்ல உங்க சகோதரியை கற்பழிக்க வருபவனை விட்டு, பக்கத்து வீட்டுக்காரன் சகோதரிக்காக குரல் கொடுக்கணுமாம்னு இந்த புத்திசாலி சொல்றார்ப்பா. எல்லோரும் கேட்டுக்கோங்க. தனக்குப் பின் தான் தானம். உன் வீட்டு தீயை அணைச்சுட்டு பக்கத்து வீட்டு தீயை அணைக்கப் போ. அதுக்காக பக்கத்து விட்டை முற்றாக மறந்துவிடு என்றில்லை. காசாவுக்காக ஈராக்கிற்காக நாங்களும் குரல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். கொசோவா பிறந்த போது சொந்த மக்களை விட அதிகம் குதூகலித்தது நாங்கள் தான்.

தைப் பிறப்பிறப்பிற்கு நான் போட்ட பதிவைப் பாருங்கள். ஆஸ்ரேலியாவில் வெள்ளப்பெருக்குக்கும் உதவ எங்கள் இளைஞர்களும் முன்னிற்கிறார்கள்.

யோஹன்னா யாழினி said...

விஷயங்களை தெரிந்துகொள்ளாமல் தான் தோன்றித்தனமாக எழுதப்பட்ட கட்டுரை.விவரமில்லாத சிறு குழந்தையின்
பிதற்றல் போல உள்ளது தங்களின் கட்டுரை.இப்படிப்பட்ட கட்டுரையை எதிர்பார்க்கவில்லை.இந்தவார விகடன் கட்டுரையை
படியுங்கள்.

சௌந்தர் said...

@@தோழர் உமர்...

தீர்ப்பும் தீர்ப்பின் மூலமும் ஆராயப்பட வேண்டியது. இதை தெளிவான விடயமாக பார்த்து நாம் கருத்து சொல்ல முடியாது. தற்போது தூக்கு தண்டனை வேண்டாம் என்று வலியுறுத்தி பேசுவது மட்டுமே சரியான செயல்.

அனாமிகா துவாரகன் said...

அரசியல்வாதிங்களோ நாம் இந்தியர்கள் கோஷத்தில் கண்ணுக்கு முன்னே நிற்கும் அவலங்களை கவனிக்கத் தவறுகிறார்கள் இவர்களைப் போல பலரும்.

அபி அப்பா said...

முதன் முறையாக கழுகு குழுமத்தின் ஒரு பதிவை நான் எதிர்க்கிறேன். பேரறிவாளன் செய்த குற்றம் இன்று வரை நிரூபிக்கப்படவில்லை. இதை நான் சொல்லவில்லை. சிபிஐ ரகோத்தமன் தான் சொல்லியிருக்காரு. தவிர இப்போது சி பி ஐ மோகந்தாஸ் கூட வேறு சில முக்கிய விஷயங்கள் சொல்லியிருக்காரு. கழுகு குழுமத்தினர் இது வரை இட்ட பதிவுகளில் இது தான் அதிகபட்ச எதிர்ப்பை தெரிவித்து இருக்கும் என நினைக்கிறேன். ஏன்? இங்கே வந்து தனது எதிர்ப்பை பதிய வைக்க பலரும் நினைக்கின்றனர் எனில் கழுகு குழுமத்தின் மீதான ஒரு நம்பிக்கை. அந்த குழுமம் நல்ல கட்டுரைகள் மட்டுமே வெளியிடும் என்ற நம்பிக்கை. ஆனால் இப்போது எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. இப்போதும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. உடனே இக்கட்டுரையை அதன் "ஆஃப் பாயில்டு" தன்மைக்காக நீக்கிவிட்டால் கழுகின் மதிப்பு தான் உயரும். அதை தவிர்த்து மீண்டும் மீண்டும் நீண்ட விளக்கம் கொடுப்பது தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதாகிவிடும். அது கழுகின் வாசகர்களை மேலும் எரிச்சல்படவே வைக்கும்.

அன்புடன்
அபிஅப்பா

வெங்கட் said...

நாகரீகமான எதிர்ப்பு கமெண்ட் கூட மாடரேட்
செய்யப்படுவதாக எனக்கு தகவல் வருகிறது.. ஏன்..?!
பயமா..? அல்லது
பதில் சொல்ல தெரியவில்லையா..

உமர் | Umar said...

@ சௌந்தர்
// தீர்ப்பும் தீர்ப்பின் மூலமும் ஆராயப்பட வேண்டியது. இதை தெளிவான விடயமாக பார்த்து நாம் கருத்து சொல்ல முடியாது.//

பிறகு எதன் அடிப்படையில் அவர் குற்றவாளி என்று நீங்கள் பதிவின் மூலம் தீர்ப்பளித்தீர்கள்?

//தற்போது தூக்கு தண்டனை வேண்டாம் என்று வலியுறுத்தி பேசுவது மட்டுமே சரியான செயல்.//
என்று பின்னூட்டத்தில் கூறியுள்ள நீங்கள்,

// ஏன் இவர்களையெல்லாம் தூக்கில் போட கூடாது..?? என்பது என் கேள்வியாகும்,//
என்று உங்கள் பதிவில் கூறியுள்ளீர்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றி பதிவெழுதுவதற்கு முன் முழுக்க ஆராய்ந்து எழுதுங்கள்.

சிறையில் இருப்பதாலேயே பேரறிவாளன் குற்றவாளி என்று அர்த்தமில்லை என்று கூறியிருப்பவர் முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி திரு. வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள்.

நான் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை. நிரபராதி என்று நிரூபிக்கவே போராடுகின்றேன் என்று கூறியுள்ள பேரறிவாளன் ஒரு கேள்வி எழுப்புகின்றார். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக்கொண்டிருக்கும்போதே எனது குரல்வளை தூக்குக்கயிற்றால் நசுக்கப்படுமோ? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகின்றோம் நாம்?

முறையற்ற விசாரணை மூலம் குற்றமிழைக்காத உங்களையும் நாளைத் தூக்கிலிட அரசு முயலலாம். அப்பொழுதும் நானும் தோழர்களும் உங்களுக்காகவும் குரல் கொடுப்போம். அப்பொழுது வெறும் ஹிட்சை மனதில் வைத்து வெட்டி வியாக்கியானம் பேசி யாரேனும் ஒருவர் பதிவிடவும் கூடும். ஒரு உயிரை காக்கும் நேரத்தில் இதுபோன்ற தேவையற்ற விஷயங்களை பேசுகிறோமே என்று அப்பொழுதும் அயர்ச்சி மேலிடும்.

அரை மணி நேரத்தை வீணடித்ததற்கு நன்றிகள்.

இது உங்களுக்காக அல்ல. இந்தப் பதிவை படிப்பவர்கள் உண்மையை தெரிந்துக் கொள்ளட்டும் என்பதற்காக இந்தச் சுட்டி.

baleno said...

தன் சொந்த மக்களையே கொலை செய்த அயல்நாட்டு பயங்கரவாத இயக்கமான புலியை ஏதோ காந்திய ஜனநாயக இயக்கம் மாதிரி தமிழகத்தில் பல பத்திரிக்கைகள் உட்பட பிரசாரப்படுத்தி புகழ்ந்த போது என்ன நினைத்தீர்கள்?
இன்று ஒரு நியாயமான கருத்தை சொல்வதிற்கே பலந்த எதிர்பை சந்திக்க வேண்டியுள்ளது. இன்னும் பிரச்சனைகள் வரும். இலங்கையில் புலிகளுக்கு எதிராக வாய் திறப்பவர்கள் கொல்லபடுவார்கள் என்ற நிலமையே புலிகள் இருக்கும் வரை இருந்தது.

ராஜ நடராஜன் said...

பதிவுக்கு ஒரு கண் சரியில்லை என்பதை பல பரிமாணங்கள் கொண்ட உங்கள் பின்னூட்டங்கள் உட்பட கூறுகின்றன.இந்திய ராணுவம் இலங்கை சென்றது,ராஜிவ் காந்தியின் கொலை,விடுதலைப்புலிகளின் தவறுகள், சோனியா காங்கிரஸின் கோபம், இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்கள்,இவற்றைத் தாண்டிய இன்னும் தீர்வுகளைத் தர இயலாத இலங்கை ராணுவம் என்று பல திசைகளிலிருந்து விவாதிக்க வேண்டிய ஒன்று.அப்சல் குருவின் மரணதண்டனை கட்டுரையில் மரணதண்டனையின் சில பரிமாணங்களை சொல்ல முயன்றேன். http://parvaiyil.blogspot.com/2011/08/blog-post_11.html ஆனால் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மூவரின் மரணதண்டனை பற்றி அறியாத காரணத்தால் குறிப்பிட முடியவில்லை.சிறைத்தண்டனை என்பதே அதுவும் ஆசிய நாடுகளின் சிறை வாழ்க்கை என்பதே மிகப்பெரிய தண்டனையாகும்.19 வயதில் உள்ள இளைஞனின் உணர்ச்சிகளுக்கும் 40 வயதை தொடும்போது உள்ள மனிதனுக்குமுள்ள அனுபவ சிந்தனைகளுக்கும் வித்தியாசங்கள் இருக்கும்.ராஜிவ் காந்தியின் மரணத்தின் தமிழர்களின் மனநிலைக்கும்,இப்போது இலங்கையில் தமிழர் இனப்படுகொலைகள் நிகழ்ந்ததற்குப் பின்பான உணர்வுகளுக்கும் மாற்றங்கள் உண்டு.பாலஸ்தீனியர்கள்,இஸ்ரேலியர்கள் பற்றி தான் பார்வையிடாத காரணத்தாலேயே மற்றவர்களும் விவாதிப்பதில்லை என்ற குறுகிய கண்ணோட்டம் தவறானது.இந்திய இஸ்லாமியர்கள் மதம் பரப்பும் நற்செயல்களை விட பாலஸ்தீனிய விடுதலைக்கு உரக்க குரல் கொடுப்பது நல்லது.ஆனால் செய்ய மாட்டார்கள்.அதற்கான விழிப்புணர்வோ,அரேபிய பொருளாதார நிதி உதவியோ பாலஸ்தீனியர்களிடமிருந்து கிடைக்காது.நோய்க்கு இனிப்பு தடவி மருந்து கொடுப்பது மாதிரி கமலின் விருமாண்டி படம் மரணதண்டனை பற்றி சொல்லியது.கமலின் நடிப்பையும்,இயக்கத்தையும் பாராட்டி விமர்சனம் எழுதி விட்டு இன்னொரு புதிய படத்துக்கு விமர்சனத்துக்கு தாண்டி விடுகிறோம்.மக்களின் மனநிலையும் அப்படியே உள்வாங்கலைக் கொள்வதில்லை.இந்தியன் படம் கூட அன்னா ஹசாரேவின் குரலை வேறு கோணத்தில் சொல்லியது.இந்தியனுக்குப் பிறகே இந்திய ஊழல்கள்,லஞ்சங்கள் அதிகரித்தன.இந்தியன் தாத்தா கூட ரத்தம் எடுக்கிறார்.இதனை உங்கள் கண்ணோட்டத்தில் எப்படி பார்ப்பீர்கள்?மீண்டும் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் இப்பொழுது இணைய தகவல்களால் அறியும் போது அரசு இயந்திரங்கள் இயங்கும் விதம் பற்றியும்,உண்மைகள் மறைக்கப்படுவதும்,குற்றங்களின் அளவீடுகளுக்கு அதிகமான தண்டனைகள் என்பதெல்லாம் அப்பட்டமாகத் தெரிகிறது.கசாப்பின் குற்றத்தையும்,பேரறிவாளன் குற்றத்தையும் ஒரே தராசில் இட்டு விடமுடியுமா?சோனியா காந்தியின் வன்மத்தை தொடர்ந்து இன்னுமொரு வன்மம் உருவாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற பின்னூட்டக் கருத்துக்கள் தாக்கமுடையதும் ஒரு வன்மத்திலிருந்து இன்னொரு வன்மம் பிறக்கும் காரணிகளாகக் கூட அமைந்து விடும்.இலங்கை விசயத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் திருப்திகரமானவையாக இல்லையென்பதோடு தமிழர் விரோதப் போக்கை உணர்த்துகிறது.இதையெல்லாம் இங்கே குறிப்பிடுவதன் காரணம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பது மாத்திரமே.இந்தியா சார்ந்த மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.கசாப் உட்பட.இந்தியாவின் தவறுகளுக்கான தண்டனையாக கசாப்பையும் கூட பாதுகாப்பதே மரணதண்டனை ஒழிப்பின் சவாலாக இருக்க முடியும்.தலிபான் தீவிரவாதம் அரசுரீதியாகவும்,அமெரிக்காவின் சுயநலத்தாலும் உருவான ஒன்றை 9/11 தந்தது.ஆனால் 9/11க்குப் பின்பு அமெரிக்கா தன்னை எப்படி பாதுகாத்துக்கொண்டது எனபது நிரூபணம்.9/11ல் தொடர்புடையவர்கள் எல்லாம் Gunatanomo விலே சிறைதான்.மரணதண்டனையல்ல.இந்தியாவும் பாடங்கள் கற்றுக்கொள்ளவும் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளவும் வேண்டிய கால கட்டம் இது.

ராஜ நடராஜன் said...

சென்ற பின்னூட்டத்தில் விட்டுப் போன ஒன்று.அதென்ன அன்னா ஹசாரேவுக்கும் எதிர்ப்புக்கள் வருகின்றது?தமிழகத்தில் போராடுபவனுக்கும் எதிர்ப்பு வருகிறது?

Reflections said...

மிக எளிமையாக சொல்லணும் என்றால், கொலை செய்தவன் கொல்லப்பட்டு விட்டான். இதில் வேடிக்கை பார்த்தவனை கொண்டு வந்து தூக்கில் போடுகிறார்கள், இதை தவறு என்று சொல்லும் உணர்வாளர்களை நீங்கள் கொச்சை படுத்துகிரிர்கள்.

நீங்கள் கேட்கும் மற்றொரு கேள்வி- ஏன் நாம் மற்ற நாடுகளில் நடக்கும் அநிதீகளை எதிர்த்து போராட மாட்டோம், நம்ம நாட்டில் முதலில் தமிழனுக்கு போராடவே இங்கு ஆள் இல்லை, நீங்க வேற.

அவர் அவர் செய்த குற்றத்திற்கு தண்டனை உண்டு, ஆனால் ஒருவர் ஈழ / புலி ஆதரவாளர் என்பதால், ஒருவர் மேல் பொய் குற்றசாட்டு, அது தவறு என்பது என் கருத்து.

தெரியல நீங்க எதை வைத்து இதை எழுதுனீர்கள் என்று ஆனால் வேதனை தோழா, ரொம்ப கஷ்டமா இருக்கு, மனது வலிக்கிறது உங்க பதிவு.

MAHA said...

தூக்குத‌ண்ட‌னையே கூடாது. இதை நாம் த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ ம‌ட்டும் போராடாம‌ல் பொதுவாக‌ எல்லா ம‌க்க‌ளுக்காக‌வும் போராட‌ணும் என்ற‌ க‌ருத்தை தான் க‌ழுகு சொல்ல‌ வ‌ந்த‌து.

இன‌ம், தேசிய‌ம், க‌ட‌ந்து இதை ம‌னித‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையாக‌ பார்க்க‌லாம் என்ற‌ க‌ருத்தை க‌ழுகு முன்வைத்த‌து.

இரா.ச.இமலாதித்தன் said...

இந்த பதிவுக்கு பின்னூட்டமிட்ட இணைய தமிழர்களே, அப்படியே இந்த (http://kazhuhu.blogspot.com/2011/08/blog-post_30.html) கட்டுரைக்கும் பின்னோட்டம் இடலாமே? ஏன் இந்த கட்டுரை/பதிவு உங்களது கடைக் கண்களுக்கு படவில்லை?

http://kazhuhu.blogspot.com/2011/08/blog-post_30.html

M.Mani said...

துணிச்சலான பதிவு. பாராட்டுக்கள்.

karuppannasaamy said...

\\தூக்கில் போடுவதும் போடாததும் அரசு எடுக்க வேண்டிய முடிவு....! இங்கே மனிதாபிமானம் பார்க்க வேண்டும் என்பதும் சரி ஆனால் இந்திய அரசால் யார் யாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறதோ அப்போது எல்லாம் இது மாதிரி போராட்டங்கள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்\\

எங்கு தீயவை வெற்றி பெற நினைகிறதோ அங்கு உண்மை போராடத்தான் செய்யும்... இதை தவறு என்று கூறுவது முட்டாள்தனம்!!!

thiyagarajan. said...

பேரறிவாளன் தூக்கிலிடப்பட்டால் அதற்கு முக்கியமான காரணம் அவன் தமிழன் என்பதற்காகத்தான் இருக்கும்-சங்கவி..ஏன் மலேஷியாவில் பாதிக்கப்பட்டதும் தமிழன்தானே...அப்போது இந்த புடுங்கிகள் எல்லாம் எங்கே போனார்கள்..அவன் தமிழன் இல்லயா...??ஏன்னா மலேஷியத் தமிழன் எதிர்த்தது துலுக்கன..அதுனாலதான் இந்த புடுங்கிகள் எல்லாம் கவட்டிக்குள்ளாற வால நொழைச்சிகிட்டு தூங்கப்போயிட்டானுங்க...இப்ப இந்த தமிழன் எதிர்க்கிறது சொந்த தமிழன அதனாலதான் எல்லா பயலுங்களும் ஒன்னா சேர்ந்துகிட்டு கூப்பாடு போடறானுங்க......போங்கடா போயி வேலய பாருங்க...அல்லது நெடுமாறன், வை.கோ, திருமா, ராமதாஸ் இவனுங்ககிட்ட கொடுத்த பணத்த திருப்பி கேளுங்க....

thiyagarajan. said...

சௌந்தர்...எனது கருத்துரை சற்று கடுமையாக இருப்பதற்கு மன்னிக்கவும்...ஏனென்றால் அவர்கள் தமிழ், தமிழன் என்பதற்கு காட்டும் சந்தர்ப்பவாத அர்த்தங்கள்தான் என்னைக்கோபப்படுத்துகிறது....

thiyagarajan. said...

சௌந்தர்...எனது கருத்துரை சற்று கடுமையாக இருப்பதற்கு மன்னிக்கவும்...ஏனென்றால் அவர்கள் தமிழ், தமிழன் என்பதற்கு காட்டும் சந்தர்ப்பவாத அர்த்தங்கள்தான் என்னைக்கோபப்படுத்துகிறது....

thiyagarajan. said...

சௌந்தர்...எனது கருத்துரை சற்று கடுமையாக இருப்பதற்கு மன்னிக்கவும்...ஏனென்றால் அவர்கள் தமிழ், தமிழன் என்பதற்கு காட்டும் சந்தர்ப்பவாத அர்த்தங்கள்தான் என்னைக்கோபப்படுத்துகிறது....

Sathiyanarayanan said...

/* ராஜிவ் காந்தி என்ற தலைவரின் மறைவுக்குப் பின்னால் 1991ல் இருந்து இந்திய தேசம் முன்னேற்றப்பாதையை விட்டு எவ்வளவு தூரம் பின்னோக்கிப் போய் இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? */

இந்தியா எப்பொழுது தேசம் ஆனது?

தேசத்துக்கும், நாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

அடிப்படைத் தெரியாமல் தேசம் என்ற சொல்லை பயன்படுத்தியது ஏன்?

சிவக்குமார் said...

பேரறிவாளன் மடலில்...

//19 வயதில் அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட
நிலையில், கடந்த 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப்
பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்க்காப்புப் போரின்
அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே
புதல்வன் நான். துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
தங்களைப் போன்ற மனித நேய உள்ளங்களின் துணையிருப்பதால், மரணத்தை வெல்வேன் என்ற
நம்பிக்கை உண்டு. //


ஆனந்தி சொன்னது சரியே.......பேரறிவாளன் தற்சமயம் ஒரு நடைப் பிணம்தான். மாகாபாரதத்தில் கண்ணன், கர்ணணின் இறப்பின் சமயத்தில் எல்லோரும் கூக்குரலிட்டு

அழும்போது " நான் கொன்றுவிட்டேனே, நான் கொன்றுவிட்டேனே என்று ஏன் புலம்புகிறீர்கள். அவன் ஏற்கனவே ஆறு முறை சாகடிக்கப்பட்டவன். செத்த பாம்பைதான் நீங்கள்

இப்போது கொன்றிருக்கிறீரகள்." என்றார்.

அதுபோலவே 14 வருடங்கள் சிறையில் பட்ட துன்பம் என்பது பேரறிவாளனைப் பொறுத்தவரை சாவிற்க்கு சமமானது. இனி அவருக்கு விடுதலை என்பது அவரது

குடும்பத்தாருக்கும் தமிழனாகிய ஒவ்வொருத்தருக்கும் மட்டுமே சிறிது மகிழ்ச்சியாக இருக்கும்.

5) இதே ராஜிவின் கொலைதான் ஒரு போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரவும்... அப்பாவி மக்களை கொன்றழிக்கவும் காரணமாயிருந்தது என்பதையும் ஒத்துக் கொள்வீர்கள்தானே....? -----கழுகு. அதற்க்காக தனது கணவர் தமிழர்களால் கொலை செய்யப் பட்டார் என்ற ஒரே காரணத்திற்க்காக தமிழினத்தையே முடிந்தவரை ஒழிக்க வேண்டும் என நினைப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

"தவறான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்குமெனில் அது தவறு என்பது நிரூபணம் செய்யவும் அதை எதிர்த்து கேள்வி கேட்கவும் என்ன வழிமுறைகள் இருக்க முடியும் என்ற கேள்வியையும் சாமானிய மக்களின் கேள்வியாக இங்கே முன் வைக்கிறோம்...?" ----கழுகு. சரியான தீர்ப்பினை வழங்கிய எல்லா உச்ச நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அரசு செயல்படுத்தியதா?

"பேரறிவாளனை விடுவிக்க போராடுவது வேறு ...அதற்காக ராஜிவ் கொலையை ஆதரிப்பது வேறு.... என்பதனை தமிழ்சமுதாயம் உணரவேண்டும்." -----கழுகு. இதை நான் ஆமோதிக்கிறேன்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes